இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் குறித்து அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்-அமைச்சர் மனுஷ

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் குறித்து அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்-அமைச்சர் மனுஷ

  • world
  • October 10, 2023
  • No Comment
  • 15

இஸ்ரேலிலுள்ள இலங்கை ஊழியர்களின் பாதுகாப்புத் தொடர்பிலான விடயங்களை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கை தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக இஸ்ரேலின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவதானிக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ,ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் காரணமாக இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக 2 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

இந்த மோதலின் காரணமாக இலங்கையர் ஒருவர் லேசான காயத்திற்கு உள்ளானார். இவர் தொடர்பிலான தகவல்களை தொடர்ந்து திரட்டிவருகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்

சுமார் 8,000 இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிகின்றனர்.90 வீதமானோர் பராமரிப்பு சேவை தொழிலில் துறையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அங்குள்ள இலங்கையர்கள் குறித்த தகவல்களை அறிந்துகொள்வதற்காக இரண்டு தொலை பேசி இலக்கங்கள் அறிமுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக 0094716640560 என்ற வட்ஸ்அப் இலக்கத்தினூடாக அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற உடனடி(Hot Line) தொலைபேசி இலக்கத்தினூடாகா தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *