இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

  • world
  • October 31, 2023
  • No Comment
  • 34

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (28) இடம்பெற்ற குடியரசுக் கட்சி யூதக் கூட்டணியின் வருடாந்திர உச்சிமாநாட்டில் கருத்து தெரிவித்த டிரம்ப் ‘பயணத் தடை உங்களுக்கு நினைவிருக்கிறதா?’ இஸ்லாமியர்களுக்கான பயணத்தடையை மீண்டும் கொண்டு வருவேன்’ என சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்துள்ளார்.

அவரது ஆட்சியின் போது விதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கான பயணத் தடை மிகப்பெரிய வெற்றியடைந்தது என தெரிவித்த டிரம்ப், கடந்த நான்கு ஆண்டுகளில் எந்தவிதமான சம்பவங்களும் நடக்கவில்லை, ஏனென்றால் மோசமானவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றியதே அதற்கு காரணம என தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டில், டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற ஆரம்பத்தில் ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமான், ஈராக் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளின் நுழைவிற்கு அவர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார்.

டிரம்பின் இந்த கருத்திற்கு வெள்ளை மாளிகை உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ளது.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழப்பு.

விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழப்பு.

பிரேசிலின் அமேசான் பகுதியில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஒற்றை எஞ்சின் கொண்ட குறித்த விமானம்…

Leave a Reply