வங்கிகள் மற்றும் அடமான மையங்களில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் தொடர்பில் வெளியான தகவல்

வங்கிகள் மற்றும் அடமான மையங்களில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் தொடர்பில் வெளியான தகவல்

  • local
  • August 28, 2023
  • No Comment
  • 29

பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக கடந்த வருடம் நாடு முழுவதிலும் 68,729 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க நகைகள் வங்கிகளிலும், அடமான நிலையங்களிலும் அடகு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல இதனை தெரிவித்துள்ளார்.சொத்துக்கள் விற்பனை
மேலும், கடும் வறட்சி நிலவும் பதினைந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களால் நகைகள் உட்பட 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை அடகு வைத்துள்ளதாகவும் வங்கிகள் மற்றும் அடமான மையங்கள் தெரிவிக்கின்றன.மேலும் சிலர் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக தங்களது சொத்துக்களை விற்பனை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பொருளாதார நெருக்கடி காரணமாக அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்க பணமின்றி நகைகளை இழக்கும் போக்கு அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

 

Related post

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய  திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…

Leave a Reply