டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி

டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இன்றைய நாணய மாற்று விகிதம்

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்றைய (26.03.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 307.33 ரூபாவாகவும், கொள்வனவு விலை 297.63 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 227.53 ரூபாவாகவும், கொள்வனவு விலை 217.80 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 334.61 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 321.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 389.84 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 374.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலர் வீழ்ச்சியடைவதற்கான காரணம்
இவ்வாறு டொலர் வீழ்ச்சியடைவதற்கு பதிலளித்த அரசாங்கம், பொருளாதாரம் வலுவடைவதால் டொலர் வீழ்ச்சியடைகின்றதாக கூறி உண்மையை மறைக்கின்றது.

பொருளாதாரத்தின் படி, டொலரின் மதிப்பு வீழ்ச்சிக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.முதல் காரணம், ஏற்றுமதி வருமானம், சுற்றுலா வருமானம் மற்றும் வெளிநாட்டுப் பணவரவு அதிகரிப்பு ஆகும்.

இரண்டாவது காரணம் இறக்குமதி குறைவதால் டொலருக்கான தேவை குறைகின்றது என்றும் விளக்கமளித்துள்ளார்.

Related post

தலைகீழாக ஓடும் உலகின் முதலாவது கார்

தலைகீழாக ஓடும் உலகின் முதலாவது கார்

பிரித்தானியாவைச் சேர்ந்த மெக்மர்ட்ரி ஸ்பீர்லிங் நிறுவனம் (McMurtry Speirling), தலைகீழாக ஓடும் காரை தயாரித்துள்ளது. முன்னதாக குறித்த நிறுவனம் தயாரித்த ஹைபர் மின்சார கார், பல்வேறு சாதனைகளைத் தன்வசம்…
வார இறுதி நாளில் தங்க விலை நிலவரம்

வார இறுதி நாளில் தங்க விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 262,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 240,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24…
ஷேக் ஹசீனா விவகாரம் – இன்டர்போலின் உதவியை நாடும் பங்களாதேஸ்

ஷேக் ஹசீனா விவகாரம் – இன்டர்போலின் உதவியை நாடும் பங்களாதேஸ்

ஷேக் ஹசீனாவை கைது செய்வதற்காக சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போலின் உதவியை பங்களாதேஸ் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஸில் இடம்பெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமராக…

Leave a Reply