
டிக் டாக் சேலஞ்சால் உயிரிழந்த சிறுவன்
- world
- September 7, 2023
- No Comment
- 22
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
காரமான இந்த சிப்ஸை சாப்பிடுவதால் பல்வேறு மருத்துவ விளைவுகள் ஏற்படும். இந்த சிப்ஸை பெரியவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.
தண்ணீர் குடிக்காமல் மிகவும் காரமான சிப்ஸை சாப்பிட வேண்டும் என்ற டிக்டாக் சவாலை முயன்ற 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல சேலஞ்சுகள் பிரபலமடைவது வழக்கம். அந்தவகையில் `One chip challenge’ டிக் டாக்கில் பிரபலமடைந்து வருகிறது. உலகின் மிகவும் காரமான இரண்டு மிளகுகளின் கலவையில் செய்யப்பட்டுள்ள Pacqui சிப்ஸை தண்ணீர் குடிக்காமல் சாப்பிட வேண்டும் என்பதுதான் அந்த சேலஞ்ச்.
அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயதான ஹாரிஸ் வோலோபா, டோஹெர்டி மெமோரியல் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். அவரின் நண்பன் இந்த சேலஞ்சை செய்யச் சொல்லவே, அதை ஹாரிஸ் செய்திருக்கிறார்.
காரமான சிப்ஸை சாப்பிட்டவுடன் வயிற்று வலியால் துடித்ததும், பள்ளி நிர்வாகத்தில் இருந்த செவிலியரால் கவனிக்கப்பட்டுள்ளார். பின்னர் உடனடியாக அவரின் அம்மாவிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹாரிஸ் கொஞ்சம் நன்றாக உணர்ந்திருக்கிறார். அதனால் கூடைப்பந்து விளையாடப் புறப்பட்டபோது, சுயநினைவின்றி மயங்கி உள்ளார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை தூக்கிச்சென்ற நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். இருந்தபோதும் காரமான சிப்ஸ் சாப்பிட்ட பின்னர்தான் இந்த விளைவுகள் நடந்ததாக ஹாரிஸின் அம்மா தெரிவித்து இருக்கிறார்.
இந்தச் செய்தியை அறிந்த Pacqui பிராண்ட் சிப்ஸ் நிறுவனம் சமூகவலைத்தளத்தில், “இந்த சிப்ஸை சாப்பிடுவதால் பல்வேறு மருத்துவ விளைவுகள் ஏற்படும். இந்த சிப்ஸை பெரியவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.
சிப்ஸ் சாப்பிட்டவுடன் சுவாசிப்பதில் சிரமம், மயக்கம் அல்லது குமட்டல் போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹாரிஸின் பள்ளியில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “ஹாரிஸ் வளர்ந்து வரும் நட்சத்திரம். புத்திசாலி, நகைச்சுவையான மற்றும் திறமையான இளைஞர். அவர் வீடியோ கேம்கள் மற்றும் கூடைப்பந்து விளையாடுவதை விரும்பினார்.
குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கேற்ப GoFundMe என்ற நிதி திரட்டும் தளத்தில் வெளியிடப்பட்ட குறிப்பால் செவ்வாய்க்கிழமை வரை 22,000 அமெரிக்க டாலர்கள் வரை சேகரிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021