இஸ்ரேலில் உயிரிழந்த ஜெர்மன் பெண்; நிர்வாண கோலத்தில் கொண்டு சென்ற கொடூரம்

இஸ்ரேலில் உயிரிழந்த ஜெர்மன் பெண்; நிர்வாண கோலத்தில் கொண்டு சென்ற கொடூரம்

  • world
  • October 10, 2023
  • No Comment
  • 37

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்ணின் உடலை ஹமாஸ் தீவிரவாதிகள் டிரக்கின் பின்புறத்தில் வைத்து நிர்வாண கோலத்தில் கொண்டு சென்ற வீடியோ வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த பெண்ணின் உடலை காலால் மிதித்தபடி நிர்வாணமாக டிரக்கில் தூக்கிச் செல்லும் ஹமாஸ் தீவிரவாதிகள் அந்த உடலின் மீது எச்சிலை துப்பி அவமரியாதை செய்கின்றனர்.

கதறி அழுத தாயார்
அதுமட்டுமல்லாது ,அதனைக் கண்டு டிரக்கை சுற்றி நின்றவர்களும் ஆரவாரம் செய்கின்ற காணொளி மனித உரிமை ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.

போரில் உயிரிழந்த பெண் ஜெர்மனியைச் சேர்ந்த ஷானி லவுக் (30) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனியில் இருந்து இஸ்ரேல் சென்றுள்ளார்.

நிகழ்ச்சி நடைபெற்ற இடம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதலை முதன்முதலாக தொடங்கிய எல்லைக்கு உட்பட்ட இடம் என்பதால் அவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு அந்தப் பெண் கொல்லப்பட்டுள்ளார்.

டிரக்கில் மகளின் உடலை கொண்டு செல்வதை வீடியோவில் பார்த்து கதறி அழுத ஷானியின் தாயார் ரிக்கார்டா, தனது மகளின் உடலை கண்டுபிடிக்க பாலஸ்தீனர்கள் உதவுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply