நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார்.

ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை ஸ்ருதிஹாசனே லோகேஷுடன் இணைந்து இப்பாடலில் நடிக்கவும் செய்திருக்கிறார். இப்பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “என்னை இந்தப் பாடலுக்கு நடிக்கக் கூப்பிட்டப்போ எனக்கு சப்ரைஸாகத்தான் இருந்துச்சு. அப்புறம் அவுங்க டீம் வந்து ஐடியா சொன்னாங்க. அதுக்குப் பிறகு இந்தப் பாடலைப் பண்ணலாம்னு தோணுச்சு. நான் கமல் சார் பத்திதான் என்னுடைய கரியர்ல இத்தனை நாள் பேசிருக்கேன். நான் வர்ற ஒரு காட்சில அவரோட குரல் வர்றது கண்டிப்பாகச் சொல்லிக்கிற மாதிரியான விஷயங்கள்ல ஒன்றாக இருக்கும். டைரக்‌ஷனைவிட நடிப்பு சுலபமாகதான் இருக்கு. எனக்கு நடிக்கணும்னு முழு ஆசை இல்ல. அப்படியான ஆசை எனக்கு இருந்தால் எனக்குப் பிடிச்ச படம் ‘பொல்லாதவன்’. அது மாதிரி ஒரு கதை பண்ணி என் அசிஸ்டென்ட் கிட்ட கொடுத்து நடிப்பேன். ஆனா, அப்படி ஆசை இல்லை.

என்னை இந்தப் பாடலுக்காக நம்புனாங்க. ராஜ்கமல் பிலிமிஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் எனக்கு வீடு மாதிரி. அவங்க சொன்னதை நான் மறுக்கமாட்டேன். ‘லியோ’ படத்துக்காக கமல் சாரை ஒரு வசனம் பேசுறதுக்காகக் கூப்பிட்டேன். அவர் எதுவுமே கேட்காம, 24 மணி நேரத்துக்குள்ள வந்து 5 மொழில பேசிக் கொடுத்துட்டு போனாரு. இந்தப் பாடலுக்கான ஷூட்டிங் மூணு நாள்தான் நடந்தது.

இப்போ நான் என் படத்தோட கதை வேலைகள்ல இருக்கேன். ஜூன் மாசத்துல ‘தலைவர் -171’ படத்தோட ஷூட்டிங் போறோம். இந்தப் பாட்டுல நான் வேலை பார்க்க ஒத்துகிட்டதுக்கு மூணு காரணம் இருக்கு. ஒண்ணு மூணு நாள்ல ஷூட்டிங் முடிஞ்சிடும். அதுக்கு பிறகு கமல் சார். ஸ்ருதி அப்புறம் அவங்க டீமுக்காக வேலைப் பார்க்க ஒத்துகிட்டேன். இப்போ நிறையா கமிட்மெண்ட் இருக்கு. இப்போ டிஸ்கஷன் முடிச்சிட்டு ரஜினி சார் படம். அந்தப் படம் முடிஞ்சதும் உடனடியாக ஒரு மாசத்துல ‘கைதி -2’ படத்தோட ஷுட்டிங் போகணும்” என முடித்துக் கொண்டார்.

Related post

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல்…
லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோவிஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன்,…
விஜய்யின் லியோ படத்தின் பிரீமியர் காட்சிகள் ரத்து

விஜய்யின் லியோ படத்தின் பிரீமியர் காட்சிகள் ரத்து

லியோ லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் வெளியாக இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கிறது. இப்படம் குறித்து அறிவிப்பு வந்ததில் இருந்து எதாவது ஒரு…

Leave a Reply