பாணந்துறை ரயில்  நிலையத்தில் அதிகாரி ஊழியர் இடையே முரண்பாடு

  • local
  • October 3, 2023
  • No Comment
  • 17

ரயில்  நிலையத்தில் ரயில்வே  ஊழியர்களுக்கும் மற்றுமொரு குழுவினருக்கும் இடையில்  நேற்று திங்கட்கிழமை (02) ஏற்பட்ட மோதல் காரணமாக பாணந்துறை ரயில்  நிலைய அதிபர்,  ஊழியர் உட்பட மேலுமொருவர் காயமடைந்து  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பாணந்துறை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச்  சம்பவம் தொடர்பில் தந்தையும் மகனும் சந்தேகத்தின் பேரில்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , மகன் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாணந்துறை சாகர மாவத்தையில் வசிக்கும் 50 வயதுடைய ஒருவரும் 23 வயதான அவரது மகனுமே  இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரயில் பயண சீட்டு பெறுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின்   அடிப்படையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply