அரங்கத்தில் தூக்கி கொண்டாடப்பட்ட அசானி…

அரங்கத்தில் தூக்கி கொண்டாடப்பட்ட அசானி…

சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த அசானி மற்றும் கில்மிஷா இருவரும் பாடி அசத்தி வரும் நிலையில், அசானிக்கு இந்த வாரம் கோல்டன் ஷவர் கிடைத்துள்ளது.

சரிகமப ஜூனியர்
பிரபல தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களை கடந்து 3ஆவது சீசனாக தற்போது நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் இலங்கை, இந்தியா என பல நாடுகளில் உள்ள சிறுவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு, ஆர்வமாக பாடிய வருகின்றனர்.

இதில் இலங்கையைச் சேர்ந்த அசானி மற்றும் கில்மிஷா இருவரும் பாடி வருகின்றனர். அசானி ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு சென்று கண்டி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

அசானியின் அப்பா, அம்மா, மூத்த சகோதரர் ஆகியோர் தேயிலை தோட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.200க்கு வேலை பார்த்து வரும் நிலையில், மற்றொரு சகோதரர் டீக்கடை ஒன்றில் வேலை செய்து வருகின்றார்.
முதல் கோல்டன் ஷவர்
வாணொளி மூலம் பாடல்களைக் கேட்டு பாடி பழகிய அசானி இன்று பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார்.

அசானி குறித்த மேடையில் சில வாரங்களுக்கு மட்டுமே பாடுவதற்கு அனுமதிக்கப்பட்ட இவர் பின்பு தனது திறமையால் நிரந்தர போட்டியாளராக களமிறங்கினார்.

இந்த வாரம் ஆட்டமா… தேரோட்டமா…. என்ற பாடலை பாடிய அசானி அரங்கத்தில் உள்ள நடுவர்கள், போட்டியாளர்கள் உட்பட அனைவரையும் ஆட்டம் போட வைத்துள்ளார்.

மேலும் இவருக்கு கோல்டன் ஷவரும் கொடுக்கப்பட்டுள்ளது. கோல்டன் ஷவரில் நனைந்த அசானியை தொகுப்பாளர் அர்ச்சனா தூக்கி கொண்டாடினார்.

இதுவரை இல்லாத உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அசானி காணப்பட்டது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

Related post

குக் வித் கோமாளி புகழின் மகளுக்கு பேர் வச்சாச்சு!

குக் வித் கோமாளி புகழின் மகளுக்கு பேர் வச்சாச்சு!

குக் வித் கோமாளி புகழ் தனது குழந்தைக்கு பெயர்சூட்டு விழா நடத்தியுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது. நடிகர் புகழ்குக் வித் கோமாளி மூலமாக பிரபலம் ஆன புகழ் தற்போது…
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை பாவனி ரெட்டி-  வெளியிட்ட படப்பிடிப்பு போட்டோ

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை பாவனி ரெட்டி- வெளியிட்ட படப்பிடிப்பு போட்டோ

நடிகை பாவனி ரெட்டிதமிழ் சின்னத்திரையில் ஹிட் சீரியல்கள் நடித்து பிரபலமானவர். ரெட்டைவால் குருவி, சின்னதம்பி, ராசாத்தி, தவனை முறை வாழ்க்கை என தொடர்கள் நடித்துவந்த இவர் பிக்பாஸிலும் கலந்துகொண்டார்.…
AGS இடத்தை நிரப்ப முடியாமல் தவிக்கும் எதிர்நீச்சல் சீரியல் குழு

AGS இடத்தை நிரப்ப முடியாமல் தவிக்கும் எதிர்நீச்சல் சீரியல் குழு

எதிர்நீச்சல் சீரியல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் அதில் நடிக்கும் பலருக்கும் ரசிகர்கள் இடத்தில் பெரிய ரீச் ஏற்படுத்தி கொடுத்துள்ளது, அதில் முக்கியமான ஒருவர் தான் மாரிமுத்து.…

Leave a Reply