நீச்சல் குளத்தில் சடலமாக கிடந்த பிரபல நடிகர்!  ஜஸ்டின் ட்ரூடோவின் உருக்கமான பதிவு

நீச்சல் குளத்தில் சடலமாக கிடந்த பிரபல நடிகர்! ஜஸ்டின் ட்ரூடோவின் உருக்கமான பதிவு

  • world
  • October 30, 2023
  • No Comment
  • 60

பிரபல ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரியின் திடீர் மரணம் தன்னை அதிர்ச்சியடைய வைத்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ப்ரண்ட்ஸ் பிரபலம்
அமெரிக்க நடிகரான மேத்யூ பெர்ரி தனது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Friends என்ற தொடர் மூலம் பிரபலமான மேத்யூ பெர்ரி, ’17 Again’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தான் பெர்ரி தனது வீட்டின் நீச்சல் குளத்தில் சடலமாக கிடந்துள்ளார். அவரது பணியாளர் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது பெர்ரியின் நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதனையடுத்து 911க்கு அவர் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து பொலிஸார் விரைந்து வந்து மேத்யூ பெர்ரியின் உடலை மீட்டனர்.

54 வயதான மேத்யூ மாரடைப்பு காரணமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் அவரது மரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேத்யூ பெர்ரியின் இறப்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோவின் பதிவு
இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதிவில் பள்ளித் தோழனான மேத்யூவின் மரணம் தன்னை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

‘மேத்யூ பெர்ரியின் மறைவு அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. நாங்கள் விளையாடிய பள்ளிக்கூட விளையாட்டுகளை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். உலகெங்கிலும் உள்ள மக்கள் அவர் தந்த மகிழ்ச்சியை ஒருபோதும் மறக்கப் போவதில்லை என்பது எனக்கு தெரியும். எங்களை எல்லாம் சிரிக்க வைத்ததற்கு நன்றி மேத்யூ. நீங்கள் நேசிக்கப்பட்டீர்கள், உங்களை நாங்கள் இழக்கிறோம்’ என இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply