ஸ்பெயின் எல்லையில் காட்டுத் தீ பரவல்! மக்கள் வெளியேற்றம்

ஸ்பெயின் எல்லையில் காட்டுத் தீ பரவல்! மக்கள் வெளியேற்றம்

  • world
  • August 7, 2023
  • No Comment
  • 43

மத்திய தரைக்கடல் கடற்கரையில் ஸ்பெயின் எல்லையில் உள்ள போர்ட்போவில் காட்டுத்தீ பரவியுள்ளது.

இந்த தீப்பரவல் நேற்று(05.08.2023) ஏற்பட்டுள்ளதுடன் இதனை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடியுள்ளனர்.

குறித்த பகுதியில் தீப்பரவல் அதிகரித்தமையால் 130க்கும் மேற்பட்டவர்களை அந்த பகுதியிலிருந்து வெளியேற்றியதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ சுமார் 435 ஹெக்டேர் நிலத்தை நாசமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பரவல்
ஸ்பெயினை பிரான்சுடன் இணைக்கும் தொடருந்து நிலையமான போர்ட்போவின் தெற்கில் தீ பரவல் தொடர்பில் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்கு பின்னர் முன்னெச்சரிக்கையாக மக்கள் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.இதேவேளை மீட்பு பணியில், கட்டலான் செஞ்சிலுவைச் சங்கத்தின் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சுமார் 4,000 பேர் மின்சாரம் இன்றி தவிப்பதாகவும், தெற்கே 30 கி.மீ தொலைவில் உள்ள Portbou மற்றும் Figueres இடையே தொடருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கட்டலான் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply