சமந்தாவை பாதித்த நோய் பற்றி தெரியுமா உங்களுக்கு?

சமந்தாவை பாதித்த நோய் பற்றி தெரியுமா உங்களுக்கு?

  • healthy
  • September 21, 2023
  • No Comment
  • 25

ஆட்டோ இம்யூன் குறைபாடு

 உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், ஆரோக்கியமான உறுப்புகள், திசுக்கள், செல்கள் போன்றவற்றை எதிரிகளாக நினைத்துத் தாக்கத் தொடங்கும். அதனால் ஏற்படும் பிரச்னைகள் பல. டைப் 1 வகை நீரிழிவு, சொரியாசிஸ், மயோசைட்டிஸ், ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ் என ஆட்டோஇம்யூன் குறைபாடுகளுக்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

சமீப காலமாகத்தான் இந்தப் பிரச்னை குறித்து மக்களுக்குத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. பிரபலங்கள் தங்கள் ஆட்டோஇம்யூன் குறைபாடுகள் குறித்து பொதுவெளியில் பகிரத் தொடங்கியதும் இதுகுறித்த விழிப்புணர்வு அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. அப்படித்தான் நடிகை சமந்தா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னை முடக்கிப்போட்ட மயோசைட்டிஸ் பாதிப்பு குறித்துப் பகிர்ந்தார்.

“மயோசைட்டிஸ் என்பது தசைகளின் இன்ஃப்ளமேஷன், அதாவது வீக்கம். இது பரவலாகக் காணப்படுகிற பிரச்னை அல்ல. சற்றே அரியவகை பாதிப்புதான். தசைகளில் ஏற்படும் இந்த வீக்கம் பல காரணங்களால் வரலாம். சிலருக்கு சில வகையான இன்ஃபெக்‌ஷனால் வரலாம். ஃப்ளூ பாதிப்பு, ஹெச்.ஐ.வி தொற்று போன்றவற்றாலும் வரலாம். ஆட்டோ இம்யூன் குறைபாடு காரணமாகவும் வரலாம்.

அறிகுறிகள் என்ன?
தசைகளில் பலவீனம், சோர்வு மற்றும் தசைவலி.

எப்படி உறுதிப்படுத்துவது?

`ஆட்டோஇம்யூன் பேனல் பிளட் டெஸ்ட்’ செய்ய வேண்டியிருக்கும். சிலருக்கு தசை அல்லது சருமத்தை பயாப்சி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். சிலருக்கு `எலக்ட்டோமையோகிராபி (Electromyography அல்லது EMG) மற்றும் எம்ஆர்ஐ சோதனைகள் தேவைப்படும்.
சிகிச்சை முறை
பாதிப்பின் தீவிரம் குறைக்க சில வேளைகளில் ஸ்டீராய்டு மருந்துகளும், இம்யூனோசப்ரசென்ட் வகை மருந்துகளும் தேவைப்படும்.

எந்த வகையான மயோசைட்டிஸ் என்பதைப் பொறுத்து மருந்துகள் பரிந்துரைக்கப்படும். இவை தவிர, பிசியோதெரபி, யோகா, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் போன்றவையும் செய்ய வேண்டியிருக்கும். இன்ஃப்ளமேஷனை குறைக்கும் வகையிலான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

அசைவ உணவுகள், பால் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரீஃபைண்டு உணவுகள், எண்ணெய் உணவுகள், வெளி உணவுகள் போன்றவற்றைக் குறைத்துவிட்டு, ஃப்ரெஷ் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.”

Related post

நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெரிய நெல்லிக்காய்

நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெரிய நெல்லிக்காய்

“நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றும். வயிற்றுப் புண்களைக் குணமாக்கும். இதயத்துக்கும் நல்லது. நோய்த்தொற்றுகள் வராமல் காக்கும். நம் உடம்பில்…
அசைவத்திலிருந்து சைவ உணவுக்கு மாறியதும் உடல் எடை அதிகரிப்பது ஏன்?

அசைவத்திலிருந்து சைவ உணவுக்கு மாறியதும் உடல் எடை அதிகரிப்பது ஏன்?

அசைவ உணவுகள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது சாதம், காய்கறிகள் இவற்றுடன் சிக்கன், முட்டை, மீன் என புரதச்சத்து நிறைந்த உணவுகளைப் பிரதானமாக சாப்பிட்டுப் பழகியிருப்பீர்கள். புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடும்போது அடிக்கடி…
இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது

இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது

வீட்டில் உணவு மீதமானால், அதை பிரிட்ஜில் வைத்து , பிறகு மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும் வழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால், அதில்…

Leave a Reply