அசைவத்திலிருந்து சைவ உணவுக்கு மாறியதும் உடல் எடை அதிகரிப்பது ஏன்?

அசைவத்திலிருந்து சைவ உணவுக்கு மாறியதும் உடல் எடை அதிகரிப்பது ஏன்?

  • healthy
  • October 25, 2023
  • No Comment
  • 33

அசைவ உணவுகள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது சாதம், காய்கறிகள் இவற்றுடன் சிக்கன், முட்டை, மீன் என புரதச்சத்து நிறைந்த உணவுகளைப் பிரதானமாக சாப்பிட்டுப் பழகியிருப்பீர்கள். புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடும்போது அடிக்கடி பசி எடுக்காது. வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும்.

அதுவே சைவத்துக்கு மாறிவிட்டதாகச் சொல்கிற நீங்கள், மீன், முட்டை, சிக்கன் தவிர்த்து காய்கறிகள் சாப்பிடத் தொடங்கி யிருப்பீர்கள். இதனால் உங்கள் உணவில் புரதச்சத்தின் அளவு வெகுவாகக் குறைந்திருக்கும். அதன் காரணமாக அடிக்கடி பசியெடுக்கும். அதனால் பசிக்கும்போதெல்லாம் இட்லி, தோசை, பிரெட், பிஸ்கட், நொறுக்குத்தீனிகள் என சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிடுவீர்கள். அப்படிச் சாப்பிட்டாலும் பசி உணர்வு கட்டுப்படாது. அதன் விளைவுதான் நீங்கள் குறிப்பிடுகிற உடல் எடை அதிகரிப்பு.

இதைத் தவிர்க்க நீங்கள் உங்கள் உணவுத்திட்டத்தை மாற்ற வேண்டும். அதாவது, உங்கள் தட்டில் குறைந்தது இரண்டு கப் காய்கறிகள் இடம்பெற வேண்டும். ஒரு கப் சாதம், இரண்டு கப் காய்கறி, கொஞ்சம் பருப்பு, ஒரு கப் கீரை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். பருப்பு உருண்டை குழம்பாகவோ, சோயாவில் தயாரிக்கப்படுகிற டோஃபு என்கிற பனீர் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். புரதச்சத்தின் அளவு அதிகமானாலே, எடை அதிகரிப்பு பிரச்னை இருக்காது. ரசம், சூப், நீர்மோர், எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதாவது, திரவ உணவின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும். இப்படியெல்லாம் செய்தும் எடை அதிகரிப்பது நிற்கவில்லை என்றால் ஊட்டச்சத்து ஆலோசகரின் உதவியை நாடுங்கள்.

Related post

நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெரிய நெல்லிக்காய்

நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெரிய நெல்லிக்காய்

“நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றும். வயிற்றுப் புண்களைக் குணமாக்கும். இதயத்துக்கும் நல்லது. நோய்த்தொற்றுகள் வராமல் காக்கும். நம் உடம்பில்…
இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது

இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது

வீட்டில் உணவு மீதமானால், அதை பிரிட்ஜில் வைத்து , பிறகு மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும் வழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால், அதில்…
தொப்பை  குறையணுமா? அப்போ இதை இப்படி சாப்பிடுங்கள்

தொப்பை குறையணுமா? அப்போ இதை இப்படி சாப்பிடுங்கள்

தொப்பையை குறைக்க நம் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கிறோம். ஜிம் செல்கிறோம், கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறோம். எனினும் சில இயற்கையான வழிகளிலும் தொப்பையை குறைக்கலாம். மருத்துவகுணங்கள் நிறைந்த சீரகம்…

Leave a Reply