ஒரு குடும்பத்தின் மாத செலவு பற்றிய அறிக்கை வெளியீடு  : புள்ளியியல் திணைக்களம்

ஒரு குடும்பத்தின் மாத செலவு பற்றிய அறிக்கை வெளியீடு : புள்ளியியல் திணைக்களம்

pictute credit: GETTY IMAGES

2023 ஆம் ஆண்டின் ஜூலை மாத புள்ளிவிவரத்தின்படி , நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான குறைந்தபட்ச மாதச் செலவு 63,912 ரூபாய் என கூறப்படுகிறது.

2023 ஆம் ஆண்டின் ஜூலை மாதாந்திர வறுமைக் கோடு அட்டவணையை வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அத்தோடு மாதாந்திர வறுமைக் கோடு அட்டவணையில், இலங்கையில் ஒருவர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு மாதத்திற்கு 15,978 ரூபாவைச் செலவிட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிப்படைத் தேவைகள்

எவ்வாறாயினும், இந்த தொகை ஜூன் மாதம் 16,089 ரூபாயாக காணப்பட்டதாகவும் தற்போது அந்த செலவு சிறிதளவு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய ஒருவருக்கு 17,233 ரூபாய் தேவைப்படுவதுடன், ஜூன் 2023 இல் இந்த தொகை 17,352 ரூபாயாக காணப்பட்டுள்ளது.

அதேவேளை, மொனராகலை மாவட்டத்தில் ஒருவரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்தளவு பெறுமதி பதிவாகியுள்ளதுடன், அதன் பெறுமதி 15,278 ரூபா எனவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், ஜூன் மாதம் இந்த பெறுமதி 15,383 ரூபாயாக காணப்பட்டதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply