இலங்கையில் அறிமுகமாகவுள்ள யு.பி.ஐ பரிவர்த்தனை முறை

இலங்கையில் அறிமுகமாகவுள்ள யு.பி.ஐ பரிவர்த்தனை முறை

சிங்கப்பூர், பிரான்ஸ் வரிசையில் தற்போது இந்தியா – இலங்கை இடையே யு.பி.ஐ பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.இந்தியாவில் யு.பி.ஐ பரிவர்த்தனை முறை ஒவ்வொரு ஆண்டும் பிரபலமடைந்து வருகிறது. யு.பி.ஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும், மதிப்பும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது.

சிறு வியாபாரிகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை எல்லா இடங்களிலும் யு.பி.ஐ பரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.இது மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கு இடையே யு.பி.ஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்த ரிசர்வ் வங்கியும், இந்திய அரசும் முயற்சித்து வருகின்றன.

நிதிநுட்ப இணைப்பு அதிகரிக்கும்

ஏற்கெனவே சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே யு.பி.ஐ பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான வசதி நடைமுறையில் இருக்கிறது.

இந்தியா – இலங்கை இடையே யு.பி.ஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான இந்த ஒப்பந்தத்தால் நிதிநுட்ப இணைப்பு அதிகரிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகப்பூர்வ இந்திய விஜயத்தை மேற்கொண்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related post

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை – காரணம் என்ன..?

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை – காரணம் என்ன..?

உலக அளவில் பொழுதுபோக்கிற்காக அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலி டிக்டாக் (TikTok). இந்த செயலின் தலைமை நிறுவனம் பைட்டான்ஸ் (ByteDance) சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. டிக்டாக் மூலம்…
இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க கூடுதல் அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க கூடுதல் அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டாகிராமில் பயனர்களின் பாதுகாப்பிற்காக புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் அம்சங்கள்சமூக வலைதள ஊடகமான இன்ஸ்டாகிராமில் பயனர்களின் தரவுகள், வரைமுறையற்று பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள்…
20 லட்சம் யூடியூப் வீடியோக்களை நீக்கிய கூகுள்… காரணம் இதுதான்?!

20 லட்சம் யூடியூப் வீடியோக்களை நீக்கிய கூகுள்… காரணம் இதுதான்?!

குறிப்பிட்ட நேரம் வரை யூடியூப் வீடீயோவை பார்த்தால் பணம் பெறலாம் என்ற மோசடிகளும், தீங்கிழைக்கக்கூடிய கன்டெட்கள் மற்றும் தவறான தகவல்கள் யூடியூபில் அதிகரித்து வருகின்றன. சமீப காலங்களில் ஆன்லைன்…

Leave a Reply