20 லட்சம் யூடியூப் வீடியோக்களை நீக்கிய கூகுள்… காரணம் இதுதான்?!

20 லட்சம் யூடியூப் வீடியோக்களை நீக்கிய கூகுள்… காரணம் இதுதான்?!

குறிப்பிட்ட நேரம் வரை யூடியூப் வீடீயோவை பார்த்தால் பணம் பெறலாம் என்ற மோசடிகளும், தீங்கிழைக்கக்கூடிய கன்டெட்கள் மற்றும் தவறான தகவல்கள் யூடியூபில் அதிகரித்து வருகின்றன.

சமீப காலங்களில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதன் நீட்சி யூடியூபிலும் தொடர்ந்ததையடுத்து பாதுகாப்பான ஆன்லைன் சூழலைப் பயனர்களுக்கு ஏற்படுத்துவதற்காக 20 லட்சம் யூடியூப் வீடியோக்களை கூகுள் நீக்கியுள்ளது.

கூகுள் ஃபார் இந்தியா 2023 நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கூகுளின் முன்னெடுப்புகள் குறித்து பேசப்பட்டது. அதாவது, குறிப்பிட்ட நேரம் வரை யூடியூப் வீடீயோவை பார்த்தால் பணம் பெறலாம் என்ற மோசடிகளும், தீங்கிழைக்கக்கூடிய கன்டெட்கள் மற்றும் தவறான தகவல்கள் யூடியூபில் அதிகரித்து வருகிறது.

எனவே, பயனர் தகவல்களைப் பாதுகாத்து, ஆன்லைன் பாதுகாப்பை மேம்படுத்துவதன் நோக்கமாக 2023-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் கூகுளின் கொள்கை விதி மீறல்களுக்காக 20 லட்சம் யூடியூப் வீடியோக்களை நீக்கியிருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது.

2023 ஜனவரி மற்றும் மார்ச் மாதத்துக்கு இடைப்பட்ட முதல் காலாண்டில் கூகுளின் கொள்கை விதி மீறல்களுக்காக 1.9 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்களை கூகுள் நீக்கியுள்ளது.

இதுமட்டுமல்லாமல் கூகுள் பே மூலமாகக் கடந்த ஆண்டு நடக்கவிருந்த 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகளையும் வெற்றிகரமாகத் தடுத்திருக்கிறது.

நிறுவனத்தின் கொள்கைகளுக்கு இணங்காத 3,500-க்கும் மேற்பட்ட கடன் வழங்கும் ஆப்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக கூகுள் கூறியுள்ளது.

Related post

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை – காரணம் என்ன..?

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை – காரணம் என்ன..?

உலக அளவில் பொழுதுபோக்கிற்காக அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலி டிக்டாக் (TikTok). இந்த செயலின் தலைமை நிறுவனம் பைட்டான்ஸ் (ByteDance) சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. டிக்டாக் மூலம்…
இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க கூடுதல் அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க கூடுதல் அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டாகிராமில் பயனர்களின் பாதுகாப்பிற்காக புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் அம்சங்கள்சமூக வலைதள ஊடகமான இன்ஸ்டாகிராமில் பயனர்களின் தரவுகள், வரைமுறையற்று பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள்…
நவம்பரில் வெளியாகும் IQoo 12 சீரிஸ்

நவம்பரில் வெளியாகும் IQoo 12 சீரிஸ்

மிகவும் எதிர்பார்க்கப்படும் iQoo 12 தொடர் போன்கள் வெளியாகவுள்ளது.இந்தத் தொடர் பிரபல சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Vivo-வின் துணை பிராண்டான iQooவிலிருந்து வருகிறது. சரியான திகதி இன்னும் அதிகாரப்பூர்வமாக…

Leave a Reply