உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

  • world
  • March 27, 2024
  • No Comment
  • 69

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிட உள்ளார்.

அதே சமயம், அவர் மீதான குற்றவழக்குகளின் விசாரணையும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே டிரம்ப் மீதான நிதி மோசடி வழக்கில், சுமார் 500 மில்லியன் டாலர் உறுதி தொகையை கட்ட நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இந்த தொகை 175 மில்லியன் டாலராக குறைக்கப்பட்டது.

இந்த சூழலில் பங்குச்சந்தையில் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் மதிப்பு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டியது.

மொத்தத்தில், அவரது நிகர மதிப்பு 4 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

இதன்மூலம் புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, 6.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் முறையாக உலகத்தின் 500 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் டொனால்டு டிரம்ப் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply