வாடகை வீடுகளில் வசிப்போருக்கு எதிராக சட்டத்தில் மாற்றங்கள் செய்துள்ள சுவிஸ் நாடாளுமன்றம்

வாடகை வீடுகளில் வசிப்போருக்கு எதிராக சட்டத்தில் மாற்றங்கள் செய்துள்ள சுவிஸ் நாடாளுமன்றம்

  • world
  • September 26, 2023
  • No Comment
  • 48

சுவிஸ் நாடாளுமன்றம், வீட்டு உரிமையாளர்களுக்கு ஆதரவாக, இன்னொரு வகையில் கூறினால், வாடகை வீடுகளில் வசிப்போருக்கு எதிராக சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

வாடகை வீடுகளில் வசிப்போருக்கு எதிராக சட்டத்தில் மாற்றங்கள்
இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி, சுவிஸ் நாடாளுமன்றத்தில் மேலவை உறுப்பினர்கள், வீட்டு உரிமையாளர்களுக்கு ஆதரவாக சட்ட மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார்கள்.

அந்த சட்ட மாற்றங்களுக்கு ஆதரவாக 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளார்கள்.
என்னென்ன மாற்றங்கள்
Swiss tenancy laws என்னும் சுவிஸ் வாடகை வீடுகள் தொடர்பிலான சட்டங்களில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

 

1. வாடகை வீடுகளில் குடியிருப்போர், அந்த வீடுகளையோ அல்லது அந்த வீடுகளிலுள்ள அறைகளையோ வேறு யாருக்காவது வாடகைக்கு விடுவதாக இருந்தால், அவர்கள் முன்கூட்டியே வீட்டு உரிமையாளரிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெறவேண்டும். அதுவும், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் யாரையும் வாடகைக்கு வைக்கக் கூடாது.

Expatica

2. வீட்டு உரிமையாளர்கள், தாங்கள் வாடகைக்கு விட்டுள்ள வீட்டுக்கு, தாங்களே குடிவர முடிவு செய்தால், தங்களுக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருப்போரை, இனி எளிதாக வீட்டைக் காலி செய்ய வைக்க முடியும்.

முதலில் , அப்படி வீட்டில் வாடகைக்கு இருப்போரை வீட்டைக் காலி செய்ய வைக்கவேண்டுமானால், வீட்டு உரிமையாளர் 3 முதல் 4 ஆண்டுகள் வரை காத்திருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply