`நீங்கள் மணிப்பூரில் இந்தியாவைக் கொன்ற தேச விரோதிகள்’ – ராகுல் காந்தி காட்டம்

`நீங்கள் மணிப்பூரில் இந்தியாவைக் கொன்ற தேச விரோதிகள்’ – ராகுல் காந்தி காட்டம்

  • world
  • August 9, 2023
  • No Comment
  • 26

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதாமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. ஆனால், பிரதமர் இதுவரை பேசவில்லை. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கோரியதின் அடிப்படையில் இன்று இரண்டாவது நாளாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படுகிறது. இன்றைய விவாதத்தை தொடங்கிய எம்.பி ராகுல் காந்தி, “இன்று இதயத்திலிருந்து பேசுகிறேன். பா.ஜ.க உறுப்பினர்கள் பயப்பட வேண்டாம். இன்று நான் மோடி – அதானி உறவு குறித்துப் பேசப்போவதில்லை.

நான் யாரையும் தாக்கிப்பேசமாட்டேன். எனவே நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். நான் மணிப்பூர் பற்றி மட்டும் தான் பேசுவேன். எனது எம்.பி தகுதி நீக்கத்தை ரத்து செய்த சபாநாயகருக்கு நன்றி. நான் பாரத் ஜோடோ என்ற பெயரில் 130 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டேன். அப்போது என்னிடம் என்ன லட்சியத்துக்காக யாத்திரை மேற்கொள்கிறீர்கள் என மக்கள் கேட்டார்கள். யாத்திரையைத் தொடங்கும் போது எனக்கே எனது லட்சியம் என்னவென்று தெரியாது.

பயணத்தின் போது, ​​மக்களின் வேதனைகளை அறிந்தது, மக்களின் பிரச்னை எனது பிரச்னையாகிவிட்டது. அன்பை செலுத்தவே நடைப்பயணம் மேற்கொண்டிருப்பதை பிறகு புரிந்துக்கொண்டேன். சில நாள்களுக்கு முன்பு, நான் மணிப்பூர் சென்றேன். ஆனால், நமது பிரதமர் இன்று வரை அங்கு செல்லவில்லை. ஏனென்றால் அவருக்கு மணிப்பூர் இந்தியா அல்ல.

 

பா.ஜ.க-வின் அரசியல் மணிப்பூரை மட்டும் கொல்லவில்லை, அதன் அரசியல் மணிப்பூரில் இந்தியாவைக் கொன்றுவிட்டது. மணிப்பூரில் நீங்கள் இந்தியாவைக் கொன்றுவிட்டீர்கள். மணிப்பூரை இரண்டாகக் கூறுபோடுவதில்தான் பா.ஜ.க-வின் திட்டம் இருக்கிறது. நீங்கள் தேசவிரோதிகள், இந்தியாவைக் கொன்ற கொலைகாரர்கள். இந்திய மக்கள் சொல்வதை பிரதமர் மோடி கேட்கவில்லையென்றால், யாருடைய பேச்சைக் கேட்பார். ” என்று ராகுல் காந்தி பேசினார்.

 

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply