சாகக் கிடந்தேன்; அப்போ கூட அந்த நபர் என் மார்பில் கை வைத்து.. நடிகை சந்தியா வேதனை!

சாகக் கிடந்தேன்; அப்போ கூட அந்த நபர் என் மார்பில் கை வைத்து.. நடிகை சந்தியா வேதனை!

  • Cinema
  • August 21, 2023
  • No Comment
  • 21

தனது வாழ்வில் நடந்த கசப்பான நிகழ்வு குறித்து நடிகை சந்தியா பேசியுள்ளார்.

நடிகை சந்தியா ஜகர்லமுடி
சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ என்ற ஹிட்டான சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை சந்தியா ஜகர்லமுடி. இதில் முன்னணி நடிகை ராம்யா கிருஷ்ணனுடன் இனைந்து நடித்திருந்தார். இந்த சீரியலில் மட்டுமல்லாமல் சந்திரலேகா என்ற சீரியலிலும், பேய்கள் ஜாக்கிரதை என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.தற்போது தெரு நாய்களை பாதுகாத்து வரும் பணியை சந்தியா செய்து வருகிறார். அண்மையில் பிரபல யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்த இவர் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு கசப்பான நிகழ்வு குறித்து பேசியுள்ளார்.

பேட்டி
கடந்த 2006ம் ஆண்டு கும்பகோணத்தில் ‘செல்லமடி நீ எனக்கு’ என்ற டைட்டில் சாங்க், ஒரு யானையுடன் ஷூட் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த யானை என்னை தாக்கியது. ஆனால் இதுவரை அந்த யானை மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. யானை தாக்கியதில் எனக்கு ஏழு இடங்களில் எறும்பு முறிவு ஏற்பட்டது.யானை தாக்கியதில் நான் மயங்கி விட்டேன், உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் தான். யானை என் மீது கால் வைத்தது என்று நினைத்தேன். ஆனால் அது தும்பிக்கையால் என்னை நசுக்கியது. வலி தாங்க முடியாமல் நான் துடித்துக் கொண்டிருந்தேன். உடனே அங்கிருந்த டான்சர்கள் என்னை தூக்கிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த டான்சர்களில் ஒருவன், நான் வலியில் துடித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு உதவி செய்வது போல என்னுடைய மார்பில் கை வைத்து சுகம் கண்டு கொண்டிருந்தான்.

என் வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்றால் இதைத்தான் நான் சொல்வேன். அந்த நேரத்தில் நான் கிட்டத்தட்ட பிணம் மாதிரி இருந்தேன், பிணத்தை கூடவா இப்படி செய்வார்கள்? என் மார்பில் கை வைத்த அந்த டான்சர் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் அதை நான் உணர்ந்தேன். அந்த நேரத்தில் கும்பகோணத்தில் நான் ரொம்பவே தவித்துப் போனேன். அதிலிருந்து மீண்டு வர எனக்கு ரொம்ப நாளாச்சு என்று கண்ணீரோடு நடிகை சந்தியா பேசியுள்ளார்.

Related post

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…
முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல்…
லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோவிஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன்,…

Leave a Reply