பெரமுனவை பிளவுப்படுத்தும் ரணிலின் காய்நகர்த்தல்கள்! பசிலுக்கு வலுக்கும் ஆதரவு

பெரமுனவை பிளவுப்படுத்தும் ரணிலின் காய்நகர்த்தல்கள்! பசிலுக்கு வலுக்கும் ஆதரவு

  • local
  • August 16, 2023
  • No Comment
  • 19

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிளவுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறந்த முறையில் அரசியல் காய் நகர்த்தலை முன்னெடுக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் மேலவை இலங்கை கூட்டணியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணைய கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிடுவது அடிப்படையற்றது.

விலகிச் சென்றவர்கள் மீண்டும் ஒன்றிணையலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தான் எம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ராஜபக்சர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை எமக்கு கிடையாது. அரசியலில் நாங்கள் தனித்து சிறந்த முறையில் செயற்படுகிறோம்.

ஜனாதிபதியின் செயற்பாடு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிளவுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறந்த முறையில் அரசியல் காய் நகர்த்தலை முன்னெடுக்கிறார்.

அரசாங்கத்தில் அமைச்சு பதவி வகிக்கும் ஒரு தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாகவும், அமைச்சு பதவி இல்லாத பிறிதொரு தரப்பினர் பஷில் ராஜபக்சவுக்கு ஆதரவாகவும் செயற்படுகிறார்கள்.

பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.

ஆகவே விலகி சென்றவர்களை மீண்டும் இணைப்பதற்கு முன்னர் இருப்பவர்களை பொதுஜன பெரமுன தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

மக்களால் புறக்கணிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்கி நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு பொதுஜன பெரமுன துணை செல்கிறது.

69 இலட்சம் மக்களாணைக்கும், ஜனாதிபதியின் கொள்கைக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடு காணப்படுகிறது. ஆகவே பொதுஜன பெரமுனவே தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply