உக்ரைனின் இரத்த மாற்று மையத்தின் மீது ரஷ்யா குண்டு வீச்சு தாக்குதல்!

உக்ரைனின் இரத்த மாற்று மையத்தின் மீது ரஷ்யா குண்டு வீச்சு தாக்குதல்!

  • world
  • August 7, 2023
  • No Comment
  • 47

உக்ரைன் – ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் இரத்த மாற்று மையத்தின் மீது ரஷ்யா வான்வழி குண்டு தாக்குதலை நடத்தி அழித்துள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைனின் கிழக்கு கார்கிவ் பகுதியின் குபியன்ஸ்க் நகரில் உள்ள இரத்த மாற்று மையத்தின் மீதே இவ்வாறு ரஷ்யா வான்வழி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

ரஷ்யாவின் இந்த திடீர் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஜெலென்ஸ்கி தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் குறித்த அமைதி பேச்சுவார்த்தை
மேலும், ரஷ்ய தாக்குதலினால் இரத்த மாற்று மையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க மீட்பு படையினர் போராடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனித்த இந்த போர் குற்றம் ரஷ்யாவின் அராஜகங்கள் குறித்தும், தான் வாழ்வதற்காக இந்த கொடிய மிருகம் அனைத்தையும் அழிக்கின்றது எனவும்,உயிர்களை மதிக்கும் அனைவரும் பயங்கரவாதிகளை தோற்கடிப்பது மரியாதைக்குரிய விடயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, உக்ரைன் – ரஷ்ய போரினால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், போர் நிறுத்தம் குறித்த அமைதி பேச்சுவார்த்தை 40 நாடுகளின் முக்கிய தலைவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply