`Rajini 170′ போட்டோஷூட்! | Exclusive Updates

`Rajini 170′ போட்டோஷூட்! | Exclusive Updates

  • Cinema
  • August 9, 2023
  • No Comment
  • 38

வருகிற 10-ம் தேதி வெளியாகும் `ஜெயிலர்’ படத்தைப் பார்த்துவிட்டு, இமயமலைக்குப் புறப்படுகிறார் ரஜினிகாந்த். முன்னதாக படத்தை அவர் நேற்று பார்ப்பதாக இருந்ததாகவும், ஆனால் இன்றுதான் படத்தைப் பார்க்கிறார் என்றும் தகவல். இதுகுறித்து ரஜினி வட்டாரத்தில் விசாரித்தோம்.கடந்த 2010-ம் ஆண்டுவரை அவர் தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஆன்மிகப் பயணமாக இமயமலைக்குச் சென்று வந்துகொண்டிருந்தார். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றபிறகு எட்டு வருடங்களாக அவர் இமயமலைக்குச் சென்று வருவதை நிறுத்திக்கொண்டார். 2018-ல் ‘காலா’ பட சமயத்தில் ரஜினி இமயமலை சென்றபோது, அவரின் நண்பர்கள் ரஜினி தங்குவதற்கெனத் தனி வீடு ஒன்றைக் கட்டி வைத்து அதற்கு ‘குருசரண்’ எனப் பெயரும் சூட்டியிருந்தனர்.

இதுபற்றி ரஜினியின் நண்பர்கள், “அவர் ரிஷிகேஷ் வந்துவிட்டாலே குஷியாகி விடுவார். அங்கே சாமியார்களை நேரில் சந்தித்து அவர்களின் வாழ்க்கை முறை, தியானம் குறித்து ஆவலாகக் கேட்டுத் தெரிந்துகொள்வார். அவர்களோடு தனியாக அமர்ந்து மணிக்கணக்கில் பேசிக்கொண்டேயிருப்பார். தன்னுடைய உயிரை மீட்டுக்கொண்டுவந்தது பாபாஜி என்று பரிபூரணமாக அவர் நம்புகிறார்” என்கிறார்கள்.

நாளை இமயமலை செல்லும் ரஜினிகாந்த், பத்ரிநாத், ரிஷிகேஷ், கேதர்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட பல இடங்களுக்கும் செல்கிறார். வழக்கமாக அவருடன் மகள்கள் ஐஸ்வர்யாவோ, சௌந்தர்யாவோதான் செல்வார்கள். இம்முறை தனியாகச் செல்கிறார்.

இன்று சென்னையில் உள்ள ப்ரிவியூ தியேட்டர் ஒன்றில் ‘ஜெயிலர்’ படத்தைப் பார்க்கும் ரஜினி, அதன்பின்னர் இமயமலைக்குச் செல்ல ரெடியாகிறார். நாளை அதிகாலை அவர் புறப்படுவார் என்கிறார்கள்.

இதற்கிடையே ‘ஜெய் பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகவுள்ள ‘ரஜினி 170’ படத்திற்கான போட்டோஷூட்டையும் முடித்துக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து மூன்று நாள்கள் இந்த போட்டோஷூட் நடந்திருக்கிறது என்கிறார்கள். அவர் சென்னை திரும்பியதும், புது எனர்ஜியுடன் அந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்கிறார்கள்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply