யாழில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை

யாழில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை

  • local
  • September 22, 2023
  • No Comment
  • 61

யாழ். தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் கடந்த இரு வாரங்களாக மேற்கொண்ட பரிசோதனைகளில் காலாவதியான மற்றும் பழுதான உணவுப்பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ந 6 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வர்த்தகர்கள் 6 பேருக்கும் 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.  

யூஸ் பக்கெற்றுகளில்  ஒரே உற்பத்தி மற்றும் முடிவுத் திகதி

தெல்லிப்பழை பிரதேசத்திலுள்ள குளிர்பான உற்பத்தி நிலையம் ஒன்றில் யூஸ் பக்கெற்றுகளில் , முன்கூட்டியே அச்சிடப்பட்ட ஒரே உற்பத்தி மற்றும் முடிவுத் திகதி இடப்பட்டு தயாரிக்கப்பட்ட யூஸ் 16 குளிரூட்டிகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது.

அனைத்து யூஸ் பக்கற்றுக்களையும் அழிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் இதர பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்ட சகல யூஸ்களையும் மீளபெற்று அழிக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி அளவெட்டி, தெல்லிப்பழை, மாவிட்டபுரம், மல்லாகம் மற்றும் கீரிமலை பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் வழக்குகளை நேற்று வியாழக்கிழமை (21) மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.

“குழந்தைகள் பருகும் ஒரு சில வாரங்களே காலவதி திகதி இடக்கூடிய பைக்கற் யூஸ்கள் ஒரு வருட காலப்பகுதி குறிப்பிட்டு குடாநாட்டின் பல இடங்களில் விற்பனை செய்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனால் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் மாத்திரமின்றி நீண்ட கால நோக்கில் புற்றுநோய் போன்ற நோய்களும் ஏற்படும் அபாய நிலையை சுட்டிகாட்டி நீதிமன்றில் சமர்ப்பணம் செய்யப்பட்டது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply