கண்டி பெரஹராவுக்குள் வாளுடன் புகுந்து பரபரப்பை ஏற்படுத்திய கொழும்பு நபர்

கண்டி பெரஹராவுக்குள் வாளுடன் புகுந்து பரபரப்பை ஏற்படுத்திய கொழும்பு நபர்

  • local
  • August 28, 2023
  • No Comment
  • 17

கண்டி பெரஹரா ஊர்வலம் சென்ற வீதிக்குள் பயணப் பையில் வாள் ஒன்றை மறைத்துக்கொண்டு நுழைய முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி, ஜோர்ஜ் ஈ டி சில்வா பூங்காவிற்கு அருகில் நேற்று முன்தினம் இரவு இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபர் கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

விளக்கமறியல்
அவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.சந்தேகநபர் இந்த வாளை ஒரு பையில் எடுத்துச் சென்றதை பொலிஸார் கண்டுபிடித்ததுடன், எதற்காக வாளை எடுத்து வந்தீர்கள் என வினவியபோது, சந்தேகநபர் நண்பர் ஒருவர் இதனை தலந்தாவுக்கு காணிக்கையாக வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள்
கடந்த 2016ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply