லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  • local
  • October 5, 2023
  • No Comment
  • 12

லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள லிட்ரோ தலைமையகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே லிட்ரோ தலைவர் இதனைத் தெரிவித்தார்

இந்த அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

12.5 கிலோ 343 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை 3,470 ரூபா

5 கிலோ 137 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை 1,393 ரூபா

2.3 கிலோ 63 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை 650 ரூபா

உலக சந்தையில் நிலவும் தற்போதைய விலைகளைக் கருத்தில் கொண்டு, விலை திருத்தச் சூத்திரத்தின்படி, பின்வரும் விலை திருத்தம் அமுல்படுத்தப்பட்டது.

இறுதியாக கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தப்பட்டது.

இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு மூவாயிரத்து 127 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதுடன், 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, ஆயிரத்து 256 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேநேரம் 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 587 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *