தேசிய கல்விக் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடமாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை

தேசிய கல்விக் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடமாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை

இலங்கையின் அனைத்து ஆசிரிய சமூகத்தையும் பட்டதாரிகளாக நியமிக்கும் நோக்கில் தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்விக் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடமாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பேராசிரியர் பந்துல குணவர்தன நேற்று (03) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

அவ்வாறே தேசிய கல்விக் கல்லூரிகளை பல்கலைக்கழகசாலையாக முன்னேற்றுவதற்காக பின்பற்றப்பட வேண்டிய புதிய நெறிமுறைமைகள் தொடர்பான சிபாரிசுகளை முன்வைப்பதற்காக 2019.12.04 திகதி அன்று அமைச்சரவை தீர்மானத்திற்கு சிரேஷ்ட பேராசிரியர் குணபால நாணயக்கார தலைமையில் நிபுணர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
அதற்கிணங்க அக்குழுவின் சிபாரிசுகளுக்கு அமைவாக செயற்பாட்டிலுள்ள தேசிய கல்விக் கல்லூரி 20இல் 19 கல்லூரிகளை பல்கலைக்கழகசாலையாக தரமுயர்த்துதல் மற்றும் இலங்கை கல்விப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் புதிய பல்கலைக்கழகமொன்றை ஸ்தாபிப்பதற்கு, அவசியமான சட்ட விதிகளைப் பேணும் நோக்கில், புதிய சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சட்டமூலத்திற்கான ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இதன்போது அமைச்சரவைப் பேச்சாளர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெளிவுபடுத்தினார்.

Related post

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய  திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…

Leave a Reply