36 பேரின் உயிரை பறித்த ஹவாய் தீவின் காட்டுத்தீ

36 பேரின் உயிரை பறித்த ஹவாய் தீவின் காட்டுத்தீ

  • world
  • August 11, 2023
  • No Comment
  • 19

அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் உள்ள மவுயி தீவின் நகரமான லஹைனாவின் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதுமட்டுமன்றி 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த தீவிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் இந்த தீயால் நூற்றுக்கணக்கான கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.லஹைனா நகரில் கடந்த (08.08.2023) ஆம் திகதி அதிகாலையில் காட்டுத்தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனால் மவுயி தீவில் உள்ள 35,000 க்கும் மேற்பட்ட மக்கள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆபத்தில் உள்ளதாக ஹவாய் அவசரநிலை மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

2,100க்கும் மேற்பட்டோருக்கு அடைக்கலம்

மேலும் 2,100க்கும் மேற்பட்டோருக்கு அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் அடைக்கலம் வழங்கியுள்ளது.மவுயி தீவில் பலத்த வேகத்தில் வீசிய காற்று சற்று குறைந்துவிட்டதால் தற்போது தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

இந்த காட்டுத்தீயினால் மவுயி தீவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் காட்டுத்தீயை அணைத்து, மீட்புப்பணியை தீவிரப்படுத்துமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply