பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

  • world
  • August 7, 2023
  • No Comment
  • 17

பிரித்தானியாவுக்கு புயல் தொடர்பில் வானிலை ஆராய்ச்சி மையம் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.ஆண்டனி புயல் என பெயரிடப்பட்டுள்ள புயல் பிரித்தானியாவை தாக்கியுள்ளது. 

மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

லண்டன் உட்பட தென்கிழக்கு இங்கிலாந்தில் விடுக்கப்பட்டுள்ள இடியுடன் கூடிய மழைக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் 22:00 BST உடன் முடிவடையும் எனவும், கார்டிஃப் மற்றும் பாத் உள்ளிட்ட மேற்குப் பகுதிகளில் மஞ்சள் காற்று எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை வரை ஒரே இரவில் காற்றின் வேகம் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அத்துடன், தென்மேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு காற்று தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 65 கிலோமீற்றர் வேகம் வரையில் பலத்த காற்று வீசலாம் என்றும், காற்றில் பறக்கும் பொருட்களால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.எனவே பொது மக்கள் வாகனங்களில் வெளியில் செல்லவோ அல்லது தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளவோ வேண்டாம் என்றும், வாகன சாரதிகள் கவனத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply