கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கிந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்காக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள தொழில்சார் பயிற்சி நெறிகள், உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் நாடளாவிய ரீதியில் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகள் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்விப்பொதுத் தராத சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்தப் பாடநெறிகளில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

Related post

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய  திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…

Leave a Reply