வெடிக்கும் போராட்டங்களால் மக்களிடத்தில் செல்வாக்கை இழக்கும் கனடா பிரதமர்

வெடிக்கும் போராட்டங்களால் மக்களிடத்தில் செல்வாக்கை இழக்கும் கனடா பிரதமர்

  • world
  • September 25, 2023
  • No Comment
  • 55

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நாட்டு மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக சமீபத்திய கருத்து கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ”இப்சோஸ்” கனடா மக்களிடையே நடத்திய கருத்து கணிப்பிலேயே இது தெரியவந்துள்ளது.

குறைந்து வரும் ஆதரவு

இக்கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 40 சதவீத மக்கள் கனடா எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலிவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கனடாவில் தேர்தல் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், 30 சதவீத மக்களே ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமருக்கு எதிராக போராட்டம்

மேலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக .இந்தியா – புதுடில்லியில் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

நேற்று (24.09.2023) .இந்திய – புதுடில்லி ஜந்தர் மந்தரில், ஐக்கிய ஹிந்து முன்னணி அமைப்பினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா மீது குற்றம் சுமத்தியுள்ளதுடன் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் கனடா பிரதமரின் செயற்பாட்டைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பியதுடன், கோரிக்கைகள் அடங்கிய மனுவை போராட்டக்காரர்கள் கனடா துாதரகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இராஜதந்திரப் போர்

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18இல், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தெரிவித்த நிலையில், இது பெரும் இராஜதந்திரப் போராக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply