ஜனாதிபதியின் தொடர் அழுத்தம்! தமிழர் பகுதியில் இராணுவம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

ஜனாதிபதியின் தொடர் அழுத்தம்! தமிழர் பகுதியில் இராணுவம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

  • local
  • August 17, 2023
  • No Comment
  • 47

ஜனாதிபதியின் அழுத்தத்தை தொடர்ந்து எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் வடக்கில் 377 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவிதுரு ஹெல உருமய கட்சி காரியாலயத்தில் நேற்று (16.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,“தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தான் வடக்கில் இராணுவத்தினர் வசம் குறைந்தபட்ச அளவிலான காணிகள் காணப்படுகின்றன. பிரிவினைவாதம் வடக்கு மாகாணத்தில் தோற்றம் பெற்றதால் ஏனைய மாகாணங்களை காட்டிலும் வடக்கு மாகாணத்திலேயே அதிகளவில் பாதுகாப்பு முகாம்கள் அமைக்க வேண்டும்.

ஜனாதிபதியின் அழுத்தம்
ஜனாதிபதியின் அழுத்தத்தை தொடர்ந்து எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் 377 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை திருப்திப்படுத்துவதற்காகவும், மகிழ்விப்பதற்காகவும் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராணுவத்துக்கு தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கிறார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 09 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் குறித்து விசேட கவனம் செலுத்தியிருந்தார்.

2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 26,812 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் 22,919 ஏக்கர் நிலப்பரப்பு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 85 சதவீதமானரை இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளன.

முகாமை அகற்ற வேண்டாம்
வடக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய தேவை தமிழ் அரசியல்வாதிகளுக்கு காணப்படுகிறதே தவிர அப்பிரதேசங்களில் வாழும் தமிழர்களுக்கல்ல, பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாமை அகற்ற அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு எதிராக அப்பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

‘இராணுவ முகாமை அகற்றினால் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும்,இப்பகுதி போதைப்பொருள் வியாபாரிகள்,சட்டவிரோத செயற்பாட்டாளர்களின் கொலனியாகும்’ஆகவே முகாமை அகற்ற வேண்டாம் என வலியுறுத்தி தமிழ் மக்கள் இராணுவ தலைமையகத்துக்கு மனுக்களை சமர்ப்பித்துள்ளார்கள்.”என கூறியுள்ளார்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply