மாணவர்களிடம் பணம் அற­வி­டப்­பட்டால் கடும் நட­வ­டிக்கை எடுக்கப்படும்: ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை

மாணவர்களிடம் பணம் அற­வி­டப்­பட்டால் கடும் நட­வ­டிக்கை எடுக்கப்படும்: ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை

  • local
  • August 8, 2023
  • No Comment
  • 48

வட மாகாணத்தில் முன்னணி பாடசாலைகளில் மின்சார கட்டணம் மற்றும் ஏனைய பாடசாலை செலவுகளுக்காக பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிட முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்(07.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,வடக்கில் உள்ள பிரபல பாடசாலைகள் சில பாடசாலை மின்சார கட்டணம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை ஈடு செய்வதற்காக மாணவர்களிடம் பணம் அறவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாணவர்களிடம் பணம் அறவிட முடியாது

அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் நிலையில் பாடசாலைகள் மாணவர்களிடம் பணம் அறவிட முடியாது.

தற்போது அரசாங்கம் பாடசாலைக்கு வழங்கும் குடிநீர் தண்ணீர் கான கோட்டாவை மட்டுப்படுத்தவுள்ள நிலையில் மாணவர்களுக்கான சுத்தமான குடிநீரை பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

இந்நிலையில் பாடசாலைகள் மாணவர்களிடம் நிதியை பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும் நிலையில் பெற்றோர்கள் நிதி வழங்க வேண்டாம். மின்சார கட்டணத்தை உயர்த்திய அரசாங்கம் பாடசாலைகளுக்கான மின்சார கொடுப்பனவுகளையும் அதிகரித்தே ஆக வேண்டும்.

சம்பளமற்ற விடுமுறை
இதற்கமைய பாடசாலைகள் மாணவர்களிடம் பணம் கேட்டால் பெற்றோர்கள் வழங்க வேண்டிய தேவை இல்லை. அவ்வாறு நிர்பந்திக்கப்பட்டால் எமக்கு தகவல் தாருங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இலங்கை அரசாங்கம் கல்வி சீர்திருத்தத்துக்காக ஐந்தாயிரம் மில்லியன் ரூபாய்களை ஒதுக்கிய நிலையில் குறித்த நிதி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.வட மாகாணம் உட்பட இலங்கையில் மூவாயிரம் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள் பலர் சம்பளமற்ற விடுமுறையை எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

மேலும், நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் ஆசிரியருக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறு பல தடவை கோரிக்கை விடுத்தும் அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை.” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related post

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…
முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு…
இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் (2)நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக, பல இடங்களில் மணிக்கு 30 தொடக்கம்…

Leave a Reply