கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் எல்லை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் எல்லை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

  • local
  • August 15, 2023
  • No Comment
  • 37

இலங்கையில் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் எல்லை பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தி உள்ளனர்.

அதிக எண்ணிக்கையிலான சட்டவிரோத ஆட் கடத்தல் நடவடிக்கைகள் கொழும்பின் ஊடாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த சட்டவிரோத ஆட்கடத்தில் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் எல்லை பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.மோசடியான ஆவணங்களை

குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இதுவரையில் இலங்கையிலிருந்து சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் 102 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போலி கடவுச்சீட்டு, போலி விசா உள்ளிட்ட மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்கவும் வேறு நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளவும் வெளிநாட்டு பிரதிகள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது நடவடிக்கை
அண்மையில் சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீனர்களைப் போன்ற தோற்றமுடைய இந்திய தம்பதியினர் போலியான முறையிலான சீன கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி செல்ல முற்பட்டபோது அதிகாரிகள் அவர்களை கைது செய்துள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டிலும் இவ்வாறான 137 சம்பவங்கள் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply