இங்கிலாந்துக்கான விசா கட்டணம் 15% ஆல் உயர்வு

இங்கிலாந்துக்கான விசா கட்டணம் 15% ஆல் உயர்வு

  • world
  • October 6, 2023
  • No Comment
  • 51

இங்கிலாந்து செல்வோருக்கான விசா கட்டணங்களை அந்நாட்டு அரசு 15 முதல் 20% வரை அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்து செல்லும் மாணவர்கள் கூடுதலாக 13 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

உலகின் மிகவும் வளமிக்க நாடுகளில் ஒன்றாக கருதப்படும் இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக இந்தியாவில் இருந்து கல்வி பயில்வதற்காகவும், மருத்துவம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவதற்காகவும் ஏராளமானோர் இங்கிலாந்து நாட்டின் விசா கோரி ஆண்டுதோறும் விண்ணப்பித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்ற பின்னர், விசா கட்டணங்களை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பது என முடிவு செய்தார்.

இதன் மூலமாக இங்கிலாந்து நாட்டின் பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதியம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த கூடுதல் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்ததுள்ளது.

6 மாதத்திற்கும் குறைவாக இங்கிலாந்தில் இருக்க விரும்புவோர் 115 பவுண்டுகள் விசா கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும்.

வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு செல்லும் மாணவர்கள் ஏற்கெனவே இருந்த 363 பவுண்டுகளுக்கு பதிலாக 490 பவுண்டுகள் விசா கட்டணமாக செலுத்த வேண்டும். இது 127 பவுண்டுகள் அதிகமாகும்.இந்திய மதிப்பில் இது சுமார் 13 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று வேலைக்காக செல்வோர் மற்றும் இங்கிலாந்திலேயே குடியிருக்க விரும்புவோர் செலுத்த வேண்டிய கட்டணங்களும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply