யாரிடமும் உதவி கோரப்போவதில்லை – ரணில் அறிவிப்பு

யாரிடமும் உதவி கோரப்போவதில்லை – ரணில் அறிவிப்பு

  • local
  • August 30, 2023
  • No Comment
  • 14
இலங்கையினால் மற்றையவர்களுக்கு சுமையில்லாத வகையில் சுய முயற்சினால் முன்னேற்றமடைய முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 
 
வெளிநாட்டு முதலீடு 
இலங்கை இனிவரும் காலங்களிலும் மற்றவர்களிடம் உதவி கேட்கும் நாடாக இல்லாமல் மற்றைய நாடுகளை போல சுயமாக முன்னேறக்கூடிய நாடாக மாற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.புதிய சந்தை, வெளிநாட்டு முதலீடு மற்றும் மூலதனத்தை கவர்ந்திழுப்பது தொடர்பில் தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவை இலங்கை பின்பற்றும் எனவும்,வேறு நாடுகளிடம் உதவி கோராது நமக்குத் தேவையானதை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், வெளிநாடுகளிடம் உதவி கோருவதினை நிறுத்தி அநேகமான நாடுகளைப் போன்று நாமே நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.    

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *