உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக மாறும் இலங்கை! ஐ.நா புகழாரம்

உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக மாறும் இலங்கை! ஐ.நா புகழாரம்

  • local
  • August 30, 2023
  • No Comment
  • 35

பொருளாதார நெருக்கடி நிலைமைகளில் இருந்து மிக வேகமாக இலங்கை மீண்டெழுந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு பாராட்டியுள்ளது.

உலகில் சுமார் 20 நாடுகள் அண்மைக்காலமாக பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும், இதில் இலங்கை விரைவாக மீண்டெழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஏனைய நாடுகள் இலங்கையை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட இணைப்பாளர் மார்க் அன்றே பிரான்ச் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அனைத்து செயற்பாடுகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் நாயகமும் இலங்கை தொடர்பில் அதே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடிய போதே மார்க் அன்றைய பிரான்ச் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

Related post

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…
முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு…
இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் (2)நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக, பல இடங்களில் மணிக்கு 30 தொடக்கம்…

Leave a Reply