எலான் மஸ்க்கை ஆலோசகராக நியமிக்க விவேக் ராமசாமி விருப்பம்

எலான் மஸ்க்கை ஆலோசகராக நியமிக்க விவேக் ராமசாமி விருப்பம்

  • world
  • August 29, 2023
  • No Comment
  • 30

அடுத்தாண்டு தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் எலான் மஸ்க்கை ஆலோசகராக நியமிக்க விரும்புவதாக விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.எலான் மஸ்க் ஆதரவு
இந்நிலையில், இந்திய வம்சாவளி விவேக் ராமசாமிக்கு டெஸ்லா நிறுவுனர் எலான் மஸ்க் தனது சமூக ஊடக பக்கத்தில் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த விவேக் ராமசாமி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் போன்ற புதிய நபர்களை அரச நிர்வாகத்திற்கு வழிகாட்ட கொண்டு வர விரும்புகிறேன்.சமீபகாலமாக, எலான் மஸ்க்கை பற்றி நன்கு தெரிந்து வைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். டுவிட்டரில் உள்ள 75 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ததால், அவர் என்னுடைய சுவாரஸ்யமான ஆலோசகராக இருப்பார் என்று எதிர்பார்க்கின்றேன்.

டுவிட்டரில் அவர் செய்த செயல், நிர்வாக ரீதியாக அரசியல் என்ன செய்ய விரும்புகின்றேன் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply