கனடாவில் அதிகரிக்கும் போலி வேலைவாய்ப்பு மோசடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் அதிகரிக்கும் போலி வேலைவாய்ப்பு மோசடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • world
  • August 29, 2023
  • No Comment
  • 30

கனடாவில் போலி வேலை வாய்ப்பு மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கனேடிய மோசடி தவிர்ப்பு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிரிப்டோ கரன்சி மோசடி செயற்பாடுகளின் ஓர் அங்கமாக இவ்வாறு போலி வேலை வாய்ப்புகள் வழங்கும் பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இணைய வழியில் சுயாதீன பணிகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக பிரச்சாரம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவ்வாறு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை எனவும் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சில பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி இவ்வாறு மோசடி மேற்கொள்ளப்படுவதோடு நட்புறவாக பழகி அதன் மூலமாக பண மோசடி செய்யும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கனேடிய மோசடி தவிர்ப்பு நிலையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதேவேளை இந்த ஆண்டில் இதுவரை 32000 மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் கடந்த ஆண்டு மோசடிகள் மூலம் 531 மில்லியன் டொலர்களை மக்கள் இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply