பிரிட்டன் அருங்காட்சியகத்தில் விலைமதிப்பு மிக்க பொருட்கள் திருட்டு

பிரிட்டன் அருங்காட்சியகத்தில் விலைமதிப்பு மிக்க பொருட்கள் திருட்டு

  • world
  • August 23, 2023
  • No Comment
  • 18

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற பிரிட்டன் அருங்காட்சியகத்தில் விலைமதிப்புமிக்க பொருள்கள் திருடப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் அருங்காட்சியகத்தில் பழங்கால நகைகள், வைரக் கற்கள், கண்ணாடிகள், போன்ற பல்வேறு பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அவ்வப்போது இங்கு கண்காட்சிகள் நடத்தப்படுவது உண்டு. ஆனால் சமீப காலமாக அங்கு கண்காட்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை.இந்த நிலையில், தற்போது அருங்காட்சியகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் விலைமதிப்புமிக்க பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

1,500-க்கும் மேற்பட்ட பொருட்கள் மாயம்
மில்லியன் கணக்கான ரோமானிய பொருள்கள் உள்பட சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பொருட்கள் மாயமாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு 50 ஆயிரம் பவுண்டு அதாவது இலங்கை மதிப்பின்படி கிட்டத்தட்ட 2 கோடி பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விசாரணையில் அருங்காட்சியகத்தின் மூத்த கண்காணிப்பாளர் பீட்டர் ஹிக்ஸ் என்பவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், திருடப்பட்ட பொருட்களை மீட்டெடுக்கத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அருங்காட்சியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply