சாரதியின் கவனக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

சாரதியின் கவனக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

  • local
  • August 8, 2023
  • No Comment
  • 38

மந்துரங்குளிய நகருக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது லொறி ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

புத்தளம் ஜயபிம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சுரேந்திர அனுருத்திக என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன்

உயிரிழந்த இளைஞன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புத்தளம் நோக்கி பயணித்த போது, புத்தளத்திலிருந்து பயணித்த மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.லொறியின் சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறியின் சாரதி

விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்கள் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அனுருத்திக ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி மந்துரங்குளிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related post

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…
முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு…
இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் (2)நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக, பல இடங்களில் மணிக்கு 30 தொடக்கம்…

Leave a Reply