வீடொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் – மகள் வழங்கிய தகவல்

வீடொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் – மகள் வழங்கிய தகவல்

  • local
  • August 8, 2023
  • No Comment
  • 25

அக்மீமன, ஹியார் பிரதேசத்தில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 47 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சந்தேகநபர் நேற்று(06.08.2023) காலை வேயங்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

கொலை
சந்தேக நபர் கடந்த 04ஆம் திகதி இரவு பெண் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்து வன்புணர்வு செய்த பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.பின்னர் சந்தேகநபர் பெண்ணிடம் இருந்த நகைகள் மற்றும் இரண்டு கைத்தொலைபேசிகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் உயிரிழந்த பெண் அக்மீமன, ஹியாரே பகுதியை சேர்ந்த 65 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் சடலம்சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் மகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய, இது தெரியவந்துள்ளது.பின்னர் விசாரணையில் அவர் அணிந்திருந்த நகை மற்றும் காதணிகளை யாரோ எடுத்துச் சென்றது தெரியவந்தது.மேலும், அவரது முகத்திலும் காயம் இருந்ததை அவதானித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related post

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய  திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…

Leave a Reply