நவம்பரில் வெளியாகும் IQoo 12 சீரிஸ்

நவம்பரில் வெளியாகும் IQoo 12 சீரிஸ்

மிகவும் எதிர்பார்க்கப்படும் iQoo 12 தொடர் போன்கள் வெளியாகவுள்ளது.இந்தத் தொடர் பிரபல சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Vivo-வின் துணை பிராண்டான iQooவிலிருந்து வருகிறது. சரியான திகதி இன்னும் அதிகாரப்பூர்வமாக நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், சமீபத்தில் கசிந்த தகவலின்படி, iQoo 12, iQoo 12 Pro சீரிஸ் நவம்பர் 7-ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

iQoo 11 தொடர் 3 வெவ்வேறு வண்ணங்களில் வருகிறது. iQoo 12 தொடர் 4,880mAh பேட்டரியை 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. iQoo 12 தொடர் Snapdragon 8 Gen 3 SoC மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 24ஜிபி வரை LPDDR5x ரேம், 1TB வரை UFS 4.0 ஸ்டோரேஜுடன் வருகிறது.

மூன்று வண்ண விருப்பங்களில் IQoo 12 தொடர்
Weibo டிப்ஸ்டர் பாண்டா இஸ் பால்ட் iQoo 12, iQoo 12 Pro மாடல் நவம்பர் 7-ஆம் திகதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறுகிறது. இது கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மற்றொரு டிப்ஸ்டர் UFCS-ன் படி, iQoo 12 ஆனது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,880mAh டூயல்-செல் பேட்டரியைக் கொண்டிருக்கும். மறுபுறம், iQoo 12 Pro ஆனது 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் பெரிய 4,980mAh பேட்டரி மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கசிந்த விவரக்குறிப்புகள்
முந்தைய கசிவுகளின்படி.. iQoo 12 தொடர் Snapdragon 8 Gen 3 SoC உடன் வரலாம். 24ஜிபி ரேம், 1TB ஸ்டோரேஜ் வரை வழங்குகிறது. ஆண்ட்ராய்டு 14 உடன் வருகிறது. 2K தெளிவுத்திறனுடன் AMOLED டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கலாம், 144Hz வரை புதுப்பிக்கும் வீதம். உலோக உடல்களுடன் வரவும் வாய்ப்புள்ளது. iQoo 12 தொடர் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

Related post

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை – காரணம் என்ன..?

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை – காரணம் என்ன..?

உலக அளவில் பொழுதுபோக்கிற்காக அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலி டிக்டாக் (TikTok). இந்த செயலின் தலைமை நிறுவனம் பைட்டான்ஸ் (ByteDance) சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. டிக்டாக் மூலம்…
இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க கூடுதல் அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க கூடுதல் அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டாகிராமில் பயனர்களின் பாதுகாப்பிற்காக புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் அம்சங்கள்சமூக வலைதள ஊடகமான இன்ஸ்டாகிராமில் பயனர்களின் தரவுகள், வரைமுறையற்று பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள்…
20 லட்சம் யூடியூப் வீடியோக்களை நீக்கிய கூகுள்… காரணம் இதுதான்?!

20 லட்சம் யூடியூப் வீடியோக்களை நீக்கிய கூகுள்… காரணம் இதுதான்?!

குறிப்பிட்ட நேரம் வரை யூடியூப் வீடீயோவை பார்த்தால் பணம் பெறலாம் என்ற மோசடிகளும், தீங்கிழைக்கக்கூடிய கன்டெட்கள் மற்றும் தவறான தகவல்கள் யூடியூபில் அதிகரித்து வருகின்றன. சமீப காலங்களில் ஆன்லைன்…

Leave a Reply