பல்கலைக்கழக அனுமதிக்கான காலஎல்லை நேற்றுடன் நிறைவு

பல்கலைக்கழக அனுமதிக்கான காலஎல்லை நேற்றுடன் நிறைவு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2022/2023 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலஎல்லை நேற்றுடன் முடிவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.

14.09.2023 முதல் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

குறித்த விண்ணப்பதாரிகள் நிகழ்நிலை மூலம் தங்களது விண்ணப்பங்களை https://admission.ugc.ac.lk/#/ இந்த இணைய முகவரியூடாக பதிவு செய்து செய்யக்கூடியதாக இருந்தது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், 263,933 பரீட்சார்த்திகள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியதாகவும், 84 பேரின் பெறுபேறுகள் பல்வேறு காரணங்களால் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 166,938 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்ற 166,938 பேரில் 149,487 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 17,451 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் ஆவர்.

அதேவேளை, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 96,995 விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தகுதிபெறவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை 17 பல்கலைக்கழகங்களுக்கு 43,209 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related post

உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெற்ற உள்ள நிலையில் அதற்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொது…
வெளிநாட்டு மருத்துவப் பட்டங்கள் தொடர்பில் வெளியான தகவல்

வெளிநாட்டு மருத்துவப் பட்டங்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களின் மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய சட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு குறித்த…
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் சுசிலின் அறிவிப்பு

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர்…

இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *