ஆளும் கட்சியினருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை! கெஹலியவைப் பாதுகாக்க அரசு கடும் பிரயத்தனம்

ஆளும் கட்சியினருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை! கெஹலியவைப் பாதுகாக்க அரசு கடும் பிரயத்தனம்

  • local
  • August 29, 2023
  • No Comment
  • 35

செப்டெம்பர் முதல் வார நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது ஆளுங்கட்சியினர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாடுகளில் தங்கியிருக்கும் ஆளுங்கட்சி உறுப்பினர்களை செப்டெம்பர் 5 ஆம் திகதிக்குள் நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு..
ஆளுங்கட்சி பிரதமர் கொறடா அலுவலகம் ஊடாக இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை செப்டெம்பர் 5 முதல் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. செப்டெம்பர் 7 அல்லது 8 ஆம் திகதிகளில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

எனவே, அந்தப் பிரேரணையை தோற்கடிப்பதற்கும், ஆளுங்கட்சியின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கும் ஆளுங்கட்சியினர் கட்டாயம் சபையில் இருக்க வேண்டும் என்று பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Related post

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…
முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு…
இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் (2)நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக, பல இடங்களில் மணிக்கு 30 தொடக்கம்…

Leave a Reply