தென் சீனக்கடல் விவகாரம்! சீன தூதரிடம் கடும் எதிர்ப்பை வெளியிட்ட பிலிப்பைன்ஸ்

தென் சீனக்கடல் விவகாரம்! சீன தூதரிடம் கடும் எதிர்ப்பை வெளியிட்ட பிலிப்பைன்ஸ்

  • world
  • August 8, 2023
  • No Comment
  • 48

சீன தூதர் ஹுவாங் சிலியனை அழைத்து தூதரக ரீதியிலான தனது எதிர்ப்பை பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

உலகின் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்றாக தென் சீனக்கடல் விளங்குகிறது.இங்கு சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, தைவான் மற்றும் புருனே ஆகிய நாடுகளிடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது.

பிலிப்பைன்ஸ் கட்டுப்பாட்டிலுள்ள தீவு
சர்ச்சைக்குரிய இந்த கடற்பகுதியில் அமைந்துள்ள தாமஸ் ஷோல் தீவு, பிலிப்பைன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.

எனவே இங்கு உணவு, நீர் மற்றும் எரிபொருள் போன்றவற்றை வழங்குவதற்காக பிலிப்பைன்ஸ் படகு சென்றுள்ளது.இந்த படகை சீன இராணுவ கப்பல் மூலம் கடலோர பாதுகாப்பு படையினர் சேதப்படுத்தியுள்ளனர்.சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளன.

மேலும் தென் சீனக்கடல் குறித்த ஒப்பந்தத்தை அமெரிக்கா புதுப்பித்துள்ளது.அதன்படி பிலிப்பைன்ஸ் மற்றும் தென் சீனக்கடலில் தாக்குதல் நடத்தினால் கூட்டாளி நாடுகளை பாதுகாக்க வேண்டும். ஆனால் ஆசிய விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துமாறு அமெரிக்காவை சீனா எச்சரித்துள்ளது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply