சிவாஜிலிங்கமே கட்சியின் பொதுச்செயலாளர்: சிறீகாந்தா பகிரங்கம்

சிவாஜிலிங்கமே கட்சியின் பொதுச்செயலாளர்: சிறீகாந்தா பகிரங்கம்

  • local
  • August 10, 2023
  • No Comment
  • 18

சிவாஜிலிங்கம் சொல்லும் ஒரு விடயத்தின் தர்க்கம் பற்றி கேள்வியெழுப்பலாம். ஆனால், அவரின் கட்சி விசுவாசம் பற்றி சந்தேகம் எழுப்ப முடியாது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சிக்குள் சில விவகாரங்கள் இருப்பது உண்மை. ஆனால், இந்த நிமிடம் வரை சிவாஜிலிங்கமே கட்சியின் பொதுச்செயலாளர். நான்தான் தலைவர். கட்சியின் விவகாரங்கள் பற்றி ஏதாவது தகவல் இருந்தால் இருவரில் ஒருவர் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என பகிரங்க கருத்தொன்றையையும் முன்வைத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என பல்வேறு தகவல்கள் வெளிவந்தன.

சிவாஜிலிங்கமே கட்சியின் பொதுச்செயலாளர்
எனினும், பரவிய சில மணி நேரங்களிலேயே அந்த விடயம் கட்சி சார்பில் மறுக்கப்பட்டது. இந்தநிலையில் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்தன், சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டது உண்மை என்று நேற்று(08.08.2023) செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திக் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அந்தக் கட்சியின் தலைவர் என்.சிறீகாந்தா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சிவாஜிலிங்கத்துக்கு மதிப்புக்குரிய கடந்தகால வரலாறுள்ளது. அவர் சொல்லும் ஒரு விடயத்தின் தர்க்கம் பற்றி கேள்வியெழுப்பலாம். ஆனால், அவரின் கட்சி விசுவாசம் பற்றி சந்தேகம் எழுப்ப முடியாது.

கட்சிக்குள் சில விவகாரங்கள் இருப்பது உண்மை. ஆனால், இந்த நிமிடம் வரை சிவாஜிலிங்கமே கட்சியின் பொதுச்செயலாளர். நான்தான் தலைவர். கட்சியின் விவகாரங்கள் பற்றி ஏதாவது தகவல் இருந்தால் இருவரில் ஒருவர் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம்.

கட்சியின் தலைமைக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் ஒன்று கூடி சில விவகாரங்களைத் தீர்க்க முயன்றோம். அது கட்சிக்குள் நடக்கும் விவகாரம். அது பகிரங்கப்படுத்த வேண்டியதில்லை என்பதால் ஊடகங்களுக்கு வெளியிடவில்லை.

மேலும் இந்த விடயங்கள் கட்சிக்குள்ளேயே எம்மால் தீர்க்கப்படும்.” என தெரிவித்துளார்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply