• August 9, 2023
  • No Comment
  • 27

விஜய்க்கு கம்பேக் கொடுத்த இயக்குநர் சித்திக் காலமானார்

விஜய்க்கு கம்பேக் கொடுத்த இயக்குநர் சித்திக் காலமானார்

மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்படும் பிரபல மலையாள இயக்குநர் சித்திக்.

தமிழில் ‘ப்ரண்ட்ஸ்’, ‘எங்கள் அண்ணா’, ‘காவலன்’, ‘சாது மிரண்டா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். நடிகர் விஜய், சூர்யா, வடிவேலு, ராதாரவி, தேவயாணி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இவரது ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் அண்மையில் சித்திக், சிறுநீரகப் பிரச்னையின் காரணமாக கேரளா கொச்சியிலுள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையிலிருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று (செவ்வாய்க் கிழமை) இரவு 9.10 மணிக்கு மாராட்டைப்பின் காரணமாகத் தனது 63வது வயதில் காலமானார்.

இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கொச்சி அமிர்தா மருத்துவமனை நிர்வாகம், “திரைப்படத் தயாரிப்பாளரும் திரைக்கதை எழுத்தாளருமான சித்திக் அவர்களின் மறைவை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தக் கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் உள்ளன” என்று தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.
சித்திக் உடல் கேரளா கடவந்திரா ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 9 மணி முதல் 11:30 மணி வரையிலும், பின்னர் அவரது இல்லத்திலும் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இயக்குநர் சித்திக், தற்போது முன்னணி நடிகராக இருக்கும் பகத் பாசிலின் தந்தையும், பிரபல இயக்குநருமான பாசிலிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ஆரம்பக் காலங்களில் மிமிக்கிரி செய்து வந்த இவரின் திறமையைக் கண்டு பாசில் அவரை உதவி இயக்குநராக தன் படங்களில் பணியாற்ற வைத்தார். பின்னர், பாசில் தயாரிப்பில் 1989-ம் ஆண்டு ‘Ramji Rao Speaking’ படத்தின் மூலம் இயக்குநராகத் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இவரது முதல் படமே இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. இந்தப் படத்தைத் தான் தமிழில் பாசிலே ‘அரங்கேற்ற வேளை’ என்று ரீமேக் செய்தார்.

இதையடுத்து ‘Harihar Nagar (1990)’, ‘Godfather (1991)’, ‘Vietnam Colony (1992)’, ‘Kabooliwala (1993)’, ‘Hitler (1996)’ எனப் பல படங்கள் மூலம் மலையாளத் திரையுலகில் தரமான இயக்குநராக முத்திரைப் பதித்தார். இவர், மொத்தம் 20 படங்களை இயக்கியுள்ளார். தமிழில் குறிப்பாக ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் நேசமணி பாத்திரம் சமீபத்தில்கூட சர்வதேச லெவலில் டிரெண்டானது. அது மட்டுமின்றி விஜய்க்கு ‘காவலன்’ படம் மூலம் கம்பேக் கொடுத்தவர் என்றும் சொல்லலாம். இப்படிப் பல தரமானப் படங்களைத் தந்து தமிழ், மலையாள ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் சித்திக். அவரது இந்த மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

Related post

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…
முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல்…
லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோவிஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன்,…

Leave a Reply