நாட்டில் கடும் வறட்சி: இலட்சக்கணக்கானோர் பாதிப்பு

நாட்டில் கடும் வறட்சி: இலட்சக்கணக்கானோர் பாதிப்பு

  • local
  • August 24, 2023
  • No Comment
  • 18

நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக இதுவரை 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 81 ஆயிரத்து 162 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 80 ஆயிரத்து 247 பேர் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 18 ஆயிரத்து 992 குடும்பங்களைச் சேர்ந்த 63 ஆயிரத்து 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர்
அத்துடன் ஊவா மாகாணத்தின், மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களில் 6 ஆயிரத்து 253 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மத்திய மாகாணத்தில் 6 ஆயிரத்து 367 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 21 ஆயிரத்து 930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நிலத்தடி நீருக்கும பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதுவரை பெறப்பட்ட நீர் மாதிரிகளின் படி, எந்தவொரு நிலத்தடி நீரும் அருந்துவதற்கு உகந்தது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply