இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை – கடுமையாகும் கட்டுப்பாடுகள்

இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை – கடுமையாகும் கட்டுப்பாடுகள்

  • local
  • August 24, 2023
  • No Comment
  • 17

பிரமிட் பண பரிவர்த்தனைகள் கொண்ட திட்டங்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தற்போது இயங்கி வரும் மற்றும் தடை செய்யப்பட்ட திட்டங்களை நடத்தி வரும் 9 நிறுவனங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,

இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

தண்டனைக்குரிய குற்றம்
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடங்குதல், விளம்பரப்படுத்தல், நடத்தல், நிர்வகித்தல் அல்லது செயற்படுத்தல் எந்தவொரு நபரும் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்வதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.சில பிரமிட் திட்டங்களை நடத்தும் சில நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியுடன் சில உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக முன்வைக்கும் கூற்றுக்களை வன்மையாக நிராகரிப்பதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய வங்கி
இவ்வாறான நியமிக்கப்பட்ட பிரமிட் திட்டங்களுக்கு வங்கிச் சட்டத்தின் 83 டி பிரிவின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளை மாற்றுவது சாத்தியம் என்பதால், இந்த விடயத்தை பரிசீலிக்குமாறு சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply